Monday, September 7, 2015

பனி
நிமிட நேர வாழ்வைப்
பயனுள்ளதாக்கும்
பரவச உணர்வே!
வெற்றி வெறி பிடித்த
மனிதர்கள்
கட்டாயம்
உன்னிடமிருந்து
கற்க வேண்டியது
எவ்வளவோ!
எவ்வளவோ!

ஏக்கப்பெருமூச்சு

தமிழ் வேகமாகச் செல்ல வேண்டும்
அச்சிலிருந்து மின் வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்
கணினித்திறம் தமிழர்களுக்குக்கட்டாயம் வேண்டும்.
இணையப் பயிற்சி இப்போதே வேண்டும்
கணித்திறனாளர் தமிழ் அறியார்.
தமிழ்த்திறனாளர்  கணித்திறமறியார்.
ஓரு மணி நேர இணை யப்பயன்பாட்டுக்கட்டணம்
இங்கே நாற்பது ரூபாய்கள்.
எங்கே,எப்போது எல்லோரும்
மின்வெளியில் தமிழ் எழுதிப்படித்துப்பயன் கொள்வாரோ!
ஏக்கம் பெருமூச்சாக வெளியேறும்

உச்சம் தொட அச்சம் தவிர்ப்போமே

ஆய்வு
இன்றைய அடிப்படைத்தேவை.
ஆனால்
பொறியியல் மாணவர்கள்
விலைக்குப் பெறுகிறார்கள்.
தோல்வி பயம்
அச்சுறுத்தலால்
தமிழக மாணவர்கள்
சிந்திக்கத்தயங்குகின்றனர்
என்று அச்சம் இன்றி
அணுகுவார்களோ அன்று
உச்சத்தைத்தொடுவது நிச்சயம்

Friday, December 24, 2010

Tamil is a classical language which has rich devotional literature. All living being are the tiny tot of the eternal ever living god of Lord Thirumal.This reference is seen in tholkappium itself. It is stated as"மாயோஓன்    மேய காடுறை உலகம் "