Monday, September 7, 2015

ஏக்கப்பெருமூச்சு

தமிழ் வேகமாகச் செல்ல வேண்டும்
அச்சிலிருந்து மின் வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்
கணினித்திறம் தமிழர்களுக்குக்கட்டாயம் வேண்டும்.
இணையப் பயிற்சி இப்போதே வேண்டும்
கணித்திறனாளர் தமிழ் அறியார்.
தமிழ்த்திறனாளர்  கணித்திறமறியார்.
ஓரு மணி நேர இணை யப்பயன்பாட்டுக்கட்டணம்
இங்கே நாற்பது ரூபாய்கள்.
எங்கே,எப்போது எல்லோரும்
மின்வெளியில் தமிழ் எழுதிப்படித்துப்பயன் கொள்வாரோ!
ஏக்கம் பெருமூச்சாக வெளியேறும்

No comments:

Post a Comment